கண்ணீருடன் வீட்டைவிட்டு புறப்பட்ட பெற்றோர்கள்.. இறுதியாக கூறிய வார்த்தை.. மதுரையில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் சொக்கலிங்கபுரம் சுடுகாட்டு பகுதியில், சாலையோரம் வயதான தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது தம்பதியில் கணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த முதியவர் பாண்டியராஜன் (வயது 63) என்பதும், அவரது மனைவி கமலம் என்பது தெரியவந்துள்ளது. இவர்களது மகன் சதீஷ்குமார் பாலிடெக்னிக் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

சிங்கம்புணரி அரசு பள்ளியில் முதல் மாணவனாக 480 மதிப்பெண்கள் எடுத்த சதீஷ்குமார் நல்ல வேலை கிடைத்ததும், அதே ஊரைச் சார்ந்த ஆனந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் பின்னர் தாய் தந்தையுடன் வசித்து வந்த நிலையில், பாண்டியராஜன் தனது மகளை கும்பகோணத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். 

மேலும், ஊரடங்கு காரணமாக மருமகன் வேலைக்கு செல்லாமல் மகளிடம் சீர்கேடு துன்புறுத்துவதை அடைந்து வேதனை அடைந்துள்ளார். தனது மகளுக்கு சீர் பொருட்கள் கொடுக்கச் சொல்லி பாண்டியராஜன் தனது மகனிடம் பலமுறை வற்புறுத்தியும், அவர் மனைவியின் பேச்சைக் கேட்டு ஆவேசமாக பெற்றோர்களை திட்டியுள்ளார். இதனால் தாய், தந்தை இருவரும் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிவு செய்துள்ளனர். 

மகளின் வாழ்க்கை நிலையையும், மருமகளின் கொடுமையை நினைத்து தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சுடுகாட்டு பகுதிக்கு வந்து தற்கொலை செய்துள்ளனர். தாங்கள் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 60 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, தனது மகனிடம் வீட்டில் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை என்ற தகவல் மட்டும் கூறி விடுமாறு கூறி விட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Parents suicide due to feeling sad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal