குழந்தையை பார்க்க ரூ.700 இலஞ்சம் கேட்ட செவிலியர்... மதுரையில் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணொருவருக்கு, கடந்த 17 ஆம் தேதியன்று இரவு அழகான பெண் குழந்தையானது பிறந்துள்ளது. இந்த சமயத்தில், மகப்பேறு பிரசவ வார்டில் பணியில் இருந்த செவிலியர், குழந்தையை காண வேண்டும் என்றால் ரூ.700 கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

குழந்தையை காண வேண்டும் என்ற ஆவலில் வேறு வழியின்றி செவிலியருக்கு ரூ.700 வழங்கியுள்ளனர். பணத்தை பெற்ற செவிலியர் குழந்தையை எடுத்து வந்து பெற்றோர்களிடம் காட்டியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக மக்கள் சட்ட இயக்க நிர்வாகி பெற்றோர் சார்பாக அரசு ராஜாஜி மருத்துவமனை உயர் அதிகாரிக்கு ஆதாரபூர்வமாக தகவல் தெரிவிக்கவே, இது குறித்து அதிகாரியிடம் கேட்ட சமயத்தில், ரூ.700 இலஞ்சம் வாங்கியது தொடர்பாக புகார் எழுந்தது.

இந்த விபரம் தொடர்பான விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், செவிலியர் இலஞ்சம் வாங்கியது உறுதியாகும் பட்சத்தில், அவரின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Nurse bribery investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal