பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தவிர்க்கும் வகையில் கொள்கைகளை உருவாக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: 

" தமிழகத்தில் பள்ளிகளில் உள்ள மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவது குறித்து பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மாணவிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை தடுப்பதற்காக அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் முறையாக செயல்படுவதற்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, கலாசாரம், தொழில்நுட்ப மாற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு காரணங்களினால் சமூகத்தில் சில தீமைகள் ஏற்படுகின்றன. 

இந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தலும் அடங்கும். ஆனால், இது கவனிக்கப்படாமல் உள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளயும் பாதிக்கும் என்பதால் இதில் கடும் நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும். பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமான ஒன்று.

அதன் காரணமாக, பள்ளிகளில் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிப்பதற்கு வசதியாக பாடப்புத்தகங்களில் '14417' என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால், அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு குழுவும் செயல்படுகிறது என்று  சமீபத்தில் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது ஆகும். 

அதே நேரம் பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படாத விவகாரத்தை விட்டுவிட முடியாது. அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்து அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல், அனைத்து பள்ளிகளிலும் பாலியல் குற்றங்களை தவிர்க்கும் வகையில் கொள்கைகளை உருவாக்கி அவற்றை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் புகார் தெரிவிப்பதற்கும், அதற்குரிய தீர்வு காண்பதற்கும் உரிய நடைமுறையை ஏற்படுத்தி, அதை மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court order to tamilandu schools for sexuall crime


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->