எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபானங்களை இன்னும் விற்பனை செய்து வருவது ஏன்? - மதுரை கிளை கேள்வி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களாக இருக்கும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து உச்சக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. 

தமிழக மக்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், குடும்பத்தையும் உடல்நலத்தையும் கெடுக்கும் மதுபானங்கள் விற்பனை தங்கு தடையின்றி நடந்து வருகிறது. தமிழக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து டோக்கன் விநியோகம் செய்து தனக்கான வருமானத்தை தவறாமல் கிடைக்க வழிவகை செய்து வருகிறது. 

இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கூறி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை மதுரை உய்ரநீதிமன்ற கிளையில் நடந்து வந்த நிலையில், ஏற்கனவே தமிழக அரசுக்கு மதுரை கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. 

இன்று இம்மனு தொடர்பான விசாரணை மீண்டும் நீதிபதி புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், " மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபானங்களை இன்னும் விற்பனை செய்து வருவது ஏன்?. இந்த விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் " என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai High Court Order TN Govt Secretary about Tasmac Open on Corona Situation 5 May 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->