பெண்மையை போற்றும் வகையில் காபியில் 11 ஓவியம்.. மதுரை கிருத்திகா சாதனை.!! - Seithipunal
Seithipunal


குடும்பம் மற்றும் குடும்ப உறவுகளின் அவசியத்தை உணர்த்தும் விதமாக வருடம்தோறும் மே மாதம் 15 ஆம் தேதி உலக குடும்ப தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் பொருட்டு மதுரை மேல அனுபாண்டி ஹவுசிங் போர்டு பகுதியை சார்ந்த பெண்மணி புதிய சாதனைக்கு முயற்சித்துள்ளார். 

காஸ்ட்யூம் டிசைனிங் இறுதி வருடம் பயின்று வரும் மாணவி கீர்த்திகா (வயது 21). இவர் Virtue Book Of world Records என்ற சாதனை செய்ய 13 மணிநேரம் தொடர்ந்து காபி பவுடரில் ஓவியம் வரைந்து சாதனை செய்துள்ளார். 

பெண்மையை போற்றும் விதமாக பெண்களின் இளமைப்பருவம், திருமணம், தாய்மை, குழந்தைப்பேறு, முதுமை என வாழ்க்கையின் ஓவ்வொரு படிநிலையையும் 11 ஓவியமாக வரைந்து வெளிப்படுத்தியுள்ளார். காபி பவுடரில் 11 ஓவியம் வரைவது தற்போதே முதல் முறை என்பதால், அது உலக சாதனை பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக கீர்த்திகா கூறுகையில், " குடும்பத்தில் தினமும் அனைத்துமாக விளங்கும் தாயினை வைத்து ஓவியம் வரைந்துள்ளேன். எனது தாயை போல, அனைத்து தாய்களுக்கும் இதனை சமர்ப்பிக்கிறேன். நமது வாழ்நாளில் தாய் எவ்வுளவு முக்கியமான பொறுப்புகளை கொண்டுள்ளார் என்பதை உணர்த்தும் ஓவியம் இது. 

தனியொரு சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறிவிட்டது. சிறுவயதில் இருந்து ஓவியத்தின் மீது எனக்கு தீராப்பற்று உண்டு. ஊரடங்கில் அந்த திறமையை புதுப்பித்து சாதனை செய்துள்ளேன். காபி மூலமாக ஓவியம் வரைவதில் மாஸ்டர் திரைப்படத்தின் காட்சியும் ஏற்கனவே வரைந்துள்ளேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Coffee Art Karthika Make Woman Life Drawing 16 May 2021


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->