TNPSC லஞ்ச ஒழிப்பு வரம்புக்குள் வரும்.!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகளுக்குள் கொண்டு வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதி மல்லாத்தி வழக்கு தொடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்க பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்பது அரசியலமைப்பு சாசன சட்டத்தின்படி அமைக்கப்பட்டிருக்கிறதுஎன்பதால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர், உறுப்பினர்களும் அரசியலமைப்பு சாசன சட்டவிதிகளின்படியே நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் பொது ஊழியர்கள் என்ற சட்ட வரையறைக்குள்தான் வருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம், லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புக்குள் கொண்டு வந்த திருத்த விதிகள் செல்லும்.

அந்த விதிகள் தன்னிச்சையானது எனக்கூறி ஒதுக்கிவிட முடியாது. இந்த விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கும் அதிகாரம் இருக்கிறது. இந்த விதிகளின் காரணமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமையோ அல்லது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தன்னாட்சி அந்தஸ்தோ எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இந்த விதிகளை முன்தேதியிட்டு அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.  தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் இருந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்க்கு மட்டும் தனியாக எந்தவொரு விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை" என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHc verdict TNPSC comes under anti bribery limits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->