கனியாமூர் கலவர வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மம் மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தின் போது பள்ளி பேருந்துகள் பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. 

அதனை தொடர்ந்து தமிழக அரசு பள்ளியை தற்காலிகமாக மூடிய நிலையில் பள்ளியின் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை எடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் படி பள்ளி மீண்டும் செயல்பட தொடங்கியது .

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் நிலையில் தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இந்த குழுவில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கடவுளும் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc order to submit investigation report on kaniyamur riot


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->