புதிய மதுபானம் விதிகள் மீதான தடை தொடரும்.! பாமக பாலு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வீடுகளில் மது விருந்து நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டிருந்தது. தமிழக அரசின் புதிய மதுபான விதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் மது விருந்து நடத்துவதற்கு திருத்தப்பட்ட விதியை ரத்து செய்வதாக அறிவித்தது. இருப்பினும் சர்வதேச விளையாட்டு போட்டிகள், சர்வதேச மாநாடுகளில் மது விருந்து நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி அனுமதி வழங்கி இருந்தது.

இதனை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரும், சமூக நீதிப் பேரவை தலைவருமான வழக்கறிஞர் பாலு கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் புதிய மதுபான விதிகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். இந்த நிலையில் பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சர்வதேச கருத்தரங்குகள் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறுவது குறித்தான விதிகளில் கொண்டுவரப்பட உள்ள திருத்தங்கள் வரும் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் புதிய திருத்த விதிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடிப்பதாக உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC order ban on TNgovt new liquor rules will continue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->