புதுக்கோட்டை : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - அதிரடி முடிவெடுத்த காதல் ஜோடி.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - அதிரடி முடிவெடுத்த காதல் ஜோடி.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் அரவம்பட்டியைச் சேர்ந்த சொர்ணபாப்பா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டைச் சேர்ந்த பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். 

இனி பெற்றோரை நம்பினால் நாம் ஒன்று சேர முடியாது என்ற காதல் ஜோடி, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையை நாடியுள்ளனர். 

உடனடியாக அவர் அரவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் அரியாணிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் உள்ளிட்டோரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவழைத்தார்.

அவர்களது முன்னிலையில் சிவராஜ் மற்றும் சொர்ண பாப்பாவிற்கு எம்எல்ஏ சின்னத்துரை திருமணம் செய்து வைத்தார். காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை எம்எல்ஏ அலுவலகத்திலேயே காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love couple got married in mla office in gandarvakottai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->