பங்குச்சந்தையில் நஷ்டம்.. குடும்பத்துடன் மத்திய அரசு அதிகாரி எடுத்த விபரீத முடிவு!
Loss in the stock market Central government officer makes a shocking decision with his family
பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் மகனை கொன்றுவிட்டு, மத்திய அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த நவீன் கண்ணன், தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் மூத்த கணக்காளராக வேலை செய்து வந்தார்.இவரது மனைவி நிவேதிதா தெற்கு ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் லவின் கண்ணன்அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று படுக்கை அறையில் நிவேதிதாவின் அலறல் சத்தம் கேட்டு, நவீன் கண்ணனின் பெற்றோர் ஓடிச்சென்று பார்த்தபோது நிவேதிதா, கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் பீறிட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்களது பேரன் லவின் கண்ணன், படுக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தான் . நிவேதிதாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவன் உடலை மீட்டு பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய நவீன் கண்ணன், வில்லிவாக்கம்-கொரட்டூர் இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
நவீன் கண்ணன், பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது மனைவியிடம் கூறிய அவர், மகனை கொன்றுவிட்டு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
Loss in the stock market Central government officer makes a shocking decision with his family