எல்கேஜி மாணவர்கள் உலக சாதனை முயற்சி..எதிர்க்கட்சித் தலைவர் நேரில் வாழ்த்து!
LKG students attempt world record Leader of the Opposition congratulates in person
மூலகுளம் பெத்தி செமினார் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற எல்கேஜி மாணவர்கள் உலக சாதனை முயற்சிநிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி மூலகுளம் பெத்தி செமினார் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் தனித்திறனில் உலக சாதனை படைத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அப்பள்ளியில் எல்கேஜி பயிலும் சிவனேஷ், கலைராஜ், கிரித்திக்கேஷ், ஆல்வார், ஹெரிக்ஷன், விஷ்ரூத் உள்ளிட்ட 9 மாணவர்கள் மற்றொரு உலக சாதனை நிகழ்வாக மருத்துவ தாவரங்களின் பெயர்களை 52 விநாடிகளில் கூறுவது, 100 போக்குவரத்து குறியீடுகளை ஒரு நிமிடம் 41 விநாடிகளில் வேகமாக கூறுவது, உறுப்பினர்களின் 25 அலைபேசி எண்களை 2 நிமிடத்தில் சொல்வது உள்ளிட்ட பல்வேறு சாதன முயற்சிகளை மேற்கொண்டனர்.
பள்ளி முதல்வர் அருட்தந்தை பாஸ்கல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சாதனை முயற்சியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், அரசு உதவி வழக்கறிஞர் அருண், உழவர்கள் திமுக தொகுதி செயலாளர் கலிய கார்த்திகேயன், வில்லியனூர் தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், கோவிந்தராஜ், தயாளன், இருதயராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
English Summary
LKG students attempt world record Leader of the Opposition congratulates in person