சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவு... ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் எழுதிய கடிதம்...!
Letter from the Chief Secretary to the IAS officers
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைசெயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2017 ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது பெயர்களிலோ அல்லது தங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களிலோ , உறவினர்களின் பெயர்களிலோ சொந்தமாக அசையாத சொத்து குறித்த விவரங்களை ஆன்லைம் மூலமாக அறிவிக்கலாம் என அறிவுறுத்தப்படுள்ளது.

அதன்படி, தலைமை செயலாளர் இறையன்பு ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை வருகின்ற ஜனவரி 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சரியான காரணம் இன்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Letter from the Chief Secretary to the IAS officers