குடியாத்தம் அருகே கங்கையம்மன் கோவில் திருவிழாவில், திடீரென ராட்டினம் சாய்ந்ததால் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


குடியாத்தம் அருகே பள்ளம் குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கங்கையம்மன் கோவில் திருவிழாவில், திடீரென ராட்டினம் சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் அருகே பள்ளம் குப்பம் கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு பிறகு கங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவை காண்பதற்காக கோவிலை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒரே நாளில் குவிந்தனர்.

இதன் காரணமாக ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு, பொழுது போக்கு அம்சங்களும் இந்த திருவிழாவில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. 

இதில், ராட்டினம் திடீரென சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த ராட்டினம் பாதுகாப்பற்ற முறையில் நிறுவப்பட்டதால், விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ராட்டினத்தில் 50க்கும் மேற்பட்டோர் மக்கள் சிக்கிக் கொண்டனர். அப்போது பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ராட்டினத்தில் சிக்கித்தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kudiyaththam gangaiyamman temple festival accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->