சாது மிரண்டால்..! காதல் திருமணம் செய்த மகனை வெட்டி கொலை செய்த தந்தை! தாயும் பலியான நிலையில் காதல் மனைவிக்கு தீவிர சிகிச்சை! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கருமாடபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபானி. இவரின் மகன் சுபாஷ் (வயது 25) திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரியுந்து வந்துள்ளார்.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு தன்னுடன் வேலை பார்த்த அனுஷா (வயது 23) என்ற பெண்ணை காதலித்து சுபாஷ் திருமணம் செய்து கொண்டதாக தெரியவருகிறது. 

இந்த திருமண விவகாரம் சுபாஷின் தந்தை தண்டபானிக்கு தெரிய வரவே, இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும், அனுஷா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், நமக்கு சரிவராது என்று தண்டபாணி தெரிவித்துள்ளார்.

தந்தையின் எதிர்ப்பை மீறி, காதல் மனைவியுடன் சுபாஷ் பாட்டில் வீட்டில் குடியேறியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த நேற்று இரவு, வீட்டில் தூங்கிகொண்டிருந்த மகன் சுபாஷ், தாய் கண்ணம்மா (வயது 65), மருமகள் அனுஷா ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி தலைமறைவாக்கியுள்ளார் தண்டபாணி.

இதில், மகன் சுபாஷ், தாய் கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அனுஷா ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்மபவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தண்டபாணியை தேடி வருகின்றனர். 

தண்டபாணி மிக சாதுவான மனிதர், எந்த வம்பு தும்புக்கு செல்லாதவர். எப்படி இப்படியான ஒரு கொலையை செய்தார் என்று எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது என்று ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krushnakiri Love Marriage issue Dad Killed own son and mother


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->