கிருஷ்ணகிரியில் பயங்கரம்: ஆம்னி பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதல்...! - 3 உயிர்கள் பறிபோன கோர விபத்து..!
Krishnagiri Car collides head Omni bus Fatal accident that claimed 3 lives
பெங்களூருவில் இருந்து தர்மபுரி நோக்கி இன்று அதிகாலை வேகமாக பயணித்துக் கொண்டிருந்த கார், நிமிடங்களில் விபத்து வலையில் சிக்கி சோகக் காட்சியாக மாறியது.
அந்த வாகனத்தில் நால்வர் பயணம் செய்திருந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆம்னி பேருந்துடன் மோதி நொறுங்கியது.

இந்த பயங்கர மோதலில், காரில் இருந்த நால்வரில் மூவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனர்; மற்றொருவர் கடுமையான காயங்களுடன் உயிர் போராட்டத்தில் துடித்தார்.
இந்த விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்த பரிதாபகரமான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்ப கட்ட விசாரணையில், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Krishnagiri Car collides head Omni bus Fatal accident that claimed 3 lives