இதற்க்கு பின்னணியில் திமுக! அதிமுக தரப்பில் பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal



திமுக தூண்டுதலின் பெயரிலேயே ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளதாக. அதிமுகவின் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர் செல்வமும், டிடிவி தினகரனும் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுமை திமுக அரசையும், அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து கோஷங்கள் எழுப்பட்டன.

இந்நிலையில், ஓபிஎஸ் - டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம் குறித்து பேட்டியளித்துள்ள முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி, " திமுகவின் தூண்டுதல் பெயரிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி வலிமை மிகுந்த தலைவராக ஒரு உருவெடுத்து விட்டதை பொறுக்காமல் திமுக தூண்டிவிட்டு தூண்டி விட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைந்து செயல்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.

முன்னதாக தேனியில் நேற்று அதிமுக சார்பாக மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், இன்றைய டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் நடத்தக்கூடிய ஆர்ப்பாட்டத்திற்கு கடுமையான விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KP Munusamy Condemn to OPS TTV And DMK


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->