கோடநாடு எஸ்டேட் : விசாரணை ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்த காவல்துறை..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த விசாரணையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட ஏராளமானோர் விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 316 பேரின் வாக்குமூலங்கள் மற்றும் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து, தனிப்படை போலீசார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். 1500 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தனிப்படை போலீசார் சமர்ப்பித்தனர். 

இதைத்தொடர்ந்து, 316 பேரிடம் சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களை வரும் 13-ம் தேதி சிபிசிஐடியிடம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஆவணங்கள் இன்று சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதால் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodanadu estet case police submite proof in court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->