சென்னை : புளியந்தோப்பு புள்ளிங்கோ உடன் மது விருந்து.! ராஜ போதையில் ரகளை செய்த போலீஸ்.!  - Seithipunal
Seithipunal


கீழ்ப்பாக்கம் அருகே முதல் நிலை காவலர் ஒருவர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் வேல்ராஜ். இவர் கீழ்ப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த லாரன்ஸ், சந்தோஷ் மற்றும் காசிமேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் விமல் குமார் ஆகியோர் நடைபாதைகள் அமர்ந்தபடி மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அதுமட்டுமல்லாமல், மது போதையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மீது தாக்குதல் நடத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலைக் காவலர் வேல்ராஜ், மது போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்த 3 பேரையும் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விமல்ராஜ் மற்றும் லாரன்ஸ், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து கொண்டு, காவலர் வேல்ராஜை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி,  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து காவலர் வேல்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த லாரன்ஸ் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கீழ்ப்பாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

மேலும், ரகளையில் ஈடுபட்ட காசிமேடு காவலர் விமல் குமார் மீது புகார் அளிக்கப்பட்டு, அவரை வடசென்னை இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kasimedu pc drink with pullinko


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->