கரூர் பழனி முருகன் நகை கடையில் ஐடி ரெய்டு! தங்க கவச காணிக்கை! கரூரின் அந்த முக்கிய புள்ளிகள் யார்?!  - Seithipunal
Seithipunal


கரூர் ஜவகர் பஜாரில் உள்ள பழனி முருகன் நகைக்கடையில் இன்று இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், அவரின் நண்பர் மற்றும் திமுக பிரபலங்கள் சிலரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

8 நாட்கள் நடைபெற்ற இந்த வருமான வரி சோதனையின் அடிப்படையில், கரூரில் நேற்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்.

இதில், சக்தி மெஸ் ஓனர் கார்த்திக் வீட்டில் மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மொத்தமாக கரூரில் நேற்று ஏழு இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இதில், பழனி முருகன் நகைக்கடையில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து வெளியான ஒரு பரபரப்பு தகவலின் படி, சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, இந்த பழனி முருகன் நகைக்கடையில் இருந்து தங்க கவசம் கொடுக்கப்பட்டது.

இந்த தங்க கவசத்தை கரூரில் உள்ள சில முக்கிய புள்ளிகள் பழனி முருகன் நகைக்கடை மூலம் காணிக்கையாக கொடுக்க ஏற்பாடு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் மற்றும் ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

அந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நகைக்கடையில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Palani Murugan Jewellers IT Raid


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->