கரூர் ஐடி ரெய்டில் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்! இறங்கி அடிக்கும் வருமான வரித்துறை! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், திமுக பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் அவரின் உள்ளிட்ட பலரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று 8வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக எதிர்பாராத ஒரு சிலரின் வீடு, அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று உள்ளது.

நேற்று, கரூரை சேர்ந்த வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த சோதனையில், இரண்டு பெட்டிகள் நிறைய சொத்து ஆவணங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் மேலும் ஒரு அதிரடியாக, கரூரில் பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் இருந்து டிஜிட்டல் ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர்.

முன்னதாக, செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் மணியின் கொங்கு மெஸ் உணவகத்தில் நேற்று மாலை சீல் அகற்றப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur IT Raid Baskar Some digital documents


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->