இரண்டு பெட்டிகளில் சொத்து ஆவணங்கள்! கரூர் ஐடி ரெய்டில் திடீர் திருப்பம்!  - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் அவரின் சகோதரர், திமுக பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பலரின் வீடு அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று எட்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் நாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள முயன்ற போது, திமுகவினர் சோதனையிட வந்த அதிகாரிகளை தாக்கி விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின்பு வருமானவரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. சதுரமாக ஒரு இரு நாளில் முடிந்திருக்க வேண்டிய வருமான வரி சோதனை இன்று 8 வது நாள் வரை தொடர இந்த சம்பவமே காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மேலும், கடந்த இரண்டு தினங்களாக யாரும் எதிர்பாராத ஒரு சிலரின் வீடு, அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கரூரை சேர்ந்த வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விடிய விடிய நடந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் நடந்த சோதனையில், இரண்டு பெட்டிகளை வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்ற இரண்டு பெட்டிகளில் சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருக்கிறதா என்ற பரபரப்பும் தொற்றி உள்ளது.

துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டு பெட்டிகளில் ஆவணங்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur IT Raid 8th day some info


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->