அண்ணாமலை போட்டியிடுவாரா? தோல்வி உறுதி! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! பாஜகவில் நடப்பது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.

பாஜக கூட்டணியுடன் சேர்த்து மொத்தம் 35 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கட்சியின் முக்கிய முகமாக கருதப்படும் அண்ணாமலைக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படாதது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது மேலிட முடிவு அல்ல, அண்ணாமலையே எடுத்த தீர்மானம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக மற்றும் அண்ணாமலை இடையேயான உறவு கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலிருந்தே சீராக இல்லை. எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலைக்கும் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பாஜக மேலிடம் சமரசம் செய்து மீண்டும் கூட்டணியை உறுதி செய்தது. அதற்காக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அண்ணாமலை போட்டியிடாததற்கு பின்னணி காரணமாக ஜோதிட ஆலோசனை கூறப்படுகிறது. சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு நாடி ஜோதிடரை சந்தித்த அவர், இந்த காலகட்டத்தில் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டாம் என்ற ஆலோசனையை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவறான தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால், அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், சாதகமான சூழல் உருவாகும் வரை தேர்தலில் இருந்து விலகி இருக்க அண்ணாமலை முடிவு செய்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அவரது ஆதரவாளர்கள் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருந்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கட்சி மேலிடமும் அவர் களமிறங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், அண்ணாமலை போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்காத நிலையில், இது பாஜக அரசியல் கணக்கில் முக்கிய அம்சமாகவே பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Annamalai contest Defeat is certain Nadi Josiah who alerted Annamalai What is happening in BJP


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->