சின்னபையனா இருக்குறதால வீட்ல திட்டுறாங்க.. 4 சில்வண்டுகள் பெற்றோரை பிரிய முடிவெடுத்து செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


பெற்றோர்கள் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 4 சிறார்களும் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு ரெட்டி கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் மனோகரன். மற்றொரு குடும்பத்தை சார்ந்தவர் சண்முகராஜா. இதில், மனோகருக்கு ஒன்பது வயது மகனும், மூன்று வயது மகளும் உள்ளனர். சண்முகராஜாவுக்கு 9 வயது மகனும், 5 வயது மகனும் உள்ளனர். சிறார்கள் 4 பேரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது வழக்கம். இவர்கள் நான்கு பேரும் அப்பகுதியில் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள், குழந்தைத்தனமான சேட்டைகள் செய்தாலும் 4 பேரும் ஒன்றாக சேர்ந்தே செய்வார்கள் என்று கூறப்படுகிறது.  

இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் நால்வரும் ஒன்றாக விளையாடிய போது, திடீரென மாயமாகி உள்ளனர். இதனால் பதறிப்போன பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல்துறையினர் உடனடியாக இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும், சுற்றுவட்டார காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கரூர் இரயில் நிலையத்தில் இரயில்வே காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதன்போது, சிறார்கள் 4 பேரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுள்ளனர். 

இவர்களிடம் சென்று எங்கிருந்து வருகிறீர்கள்? பெற்றோர்கள் எங்கே? என்று கேட்டதற்கு, " தாங்கள் வீட்டில் விளையாடினாலும், தொலைக்காட்சி பார்த்தாலும் பெற்றோர்கள் திட்டுகிறார்கள். இதனால் வெளியூர் சென்று பெரிய ஆள் ஆன பிறகு வீட்டிற்கு திரும்பி வருவோம் என்று புறப்பட்டுள்ளோம் " என்று அப்பாவித்தனமாக தெரிவித்துள்ளனர். 

இதனைக்கேட்ட காவல் துறையினர் சிரிப்பதா? வருத்தப்படுவதா? என்று தெரியாமல் விழிபிதுங்கி இருந்துள்ளனர். பின்னர், கரூர் காவல் துறையினர் குழந்தைகளை தேடுவதை அறிந்து, அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, குழந்தைகளின் பெற்றோர்களுடன் கரூர் இரயில் நிலையத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெற்றோர்களிடம் காவல் துறையினர் அறிவுறுரை கூறிய நிலையில், சிறுவர்களையும் அவர்களின் பாணியில் கண்டித்து சென்றனர். குழந்தைகளை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து சென்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Children 4 Missing Rescue at Karur Railway Station 10 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->