ஸ்க்ரீனில் மட்டும் தான் காமெடியன்.. அரசியலில் நான் தான் நாயகன் - கருணாஸ் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திருவாடானை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் நடிகர் மற்றும் எம்.எல்.ஏ கருணாஸ், அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பும் வகையில் பேசி பிரச்சனைகளை சந்தித்து வந்தார். தற்போது எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறார். 

இந்நிலையில், சென்னையில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்ட நடிகர் மற்றும் எம்.எல்.ஏ கருணாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " திரைத்துறையில் ஹீரோவாக இருந்த பலரும், அரசியலில் காமெடியனாக மாறியுள்ளார்கள். 

நான் திரைத்துறையில் மட்டும் தான் காமெடியன். அரசியல் ரீதியாக நான் ஹீரோ. எனது ஹீரோயிசத்தை நேரம் வரும் போது கட்டாயம் நான் காண்பிப்பேன். அன்று உங்கள் எல்லோருக்கும் கருணாஸ் யார் என்று புரியும். சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட உள்ளோம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunas MLA Pressmeet 24 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->