கருணாநிதி பிறந்த நாளுக்கு இனிப்புப் பொங்கல்! அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று, தமிழக பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று, சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று சமூக நலன் மட்டும் மகளிர் உரிமைத்துறையில் பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வெளியிட்டார். 

அதில் முக்கிய அறிவிப்பாக, சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில் சில :

பாலியல் குற்றங்கள் அல்லாத பிற துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.50 லட்சத்திற்கு நிதி தொகுப்பு உருவாக்கப்படும். திருச்சி, கோவை, சென்னையில் 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும். 30 ஆண்டுகளை கடந்த முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறு சீரமைக்கப்படும். 

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்து நிகழ் நேர பதிவுகளை மேற்கொள்ள 18 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடியில் திறன் கைப்பேசிகள் வழங்கப்படும்.

சத்துணவு திட்டம், உள்ளக புகார் குழு மற்றும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க ரூ.50 லட்சத்தில் இணையதள முகப்பு மற்றும் செயலி உருவாக்கப்படும். 17,312 பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு 25.70 கோடி ரூபாயில் புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.

நவீன உயர் ரக தையல் இயந்திரம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunanithi Birtha day Sweet Pongal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->