கலைஞர் நூற்றாண்டு விழா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகம் சார்பில் சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு பிரம்மாண்ட விழா வருகின்ற டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் திரை உலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து கலைஞர் ஆற்றிய மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் மிகப் பிரமாண்ட விழாவாக சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம், ஹிந்தி, மராத்தி என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம். 

கலைஞர் வசனம் எழுதிய திரைப்படங்களில் இருந்து பல்வேறு காட்சிகளை நடித்துக் காட்டுவதற்காக திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர். 

இந்த மாபெரும் விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் முதல் கட்டமாக பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விழாவில் பங்கேற்க தமிழ் சினிமாவில் உள்ள முன்னாடி நடிகர்களான விஜய், அஜித், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சுமார் 35000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நடனம், நாடகம், இசை கச்சேரி போன்ற கண்கவர் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும் திரை கலைஞர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளதால் அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது என தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karunanidhi centenary celebration


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->