சிறுவனின் உடலெல்லாம் வெறிநாயைப்போல கடித்து வைத்த கொடூரன்.. தாயின் இரண்டாம் கணவனின் கொடூரங்கள்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர் பகுதியை சார்ந்தவர் சசிகலா (வயது 34). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், முருகன் என்பவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். சசிகலாவுக்கு மொத்தமாக மூன்று குழந்தைகள் உள்ளனர். 

முதல் இரண்டு குழந்தைகளாக உள்ள மூத்த மகள் மற்றும் மகன் சசிகலாவின் சகோதரி பராமரிப்பில் இருந்து வருகின்றனர். அங்குள்ள காஞ்சாம்பாறை பகுதியில் 7 வயது மகனுடன் சசிகலா வசித்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாகத்தான் சசிகலாவுக்கு முருகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதன்பின்னரே இவர்கள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், முருகன் சசிகலாவின் 7 வயது மகனை அடித்து துன்புறுத்தி வந்துள்ளான். இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே, கடந்த சனிக்கிழமை கொடூரன் சிறுவனின் முதுகு, கை, தொடை பகுதியில் ஆழமாக கடித்துள்ளான். 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து விஷயத்தை புரிந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில், சிறுவனின் உடலில் பல பகுதிகளில் கடித்து வைத்ததற்கான தடமும், இரத்த காயமும் இருந்துள்ளது. சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த காவல் துறையினர், சிகிச்சை முடிந்ததும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். காவல் துறையினர் வருவதை அறிந்ததும் தப்பி சென்ற கொடூரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Step Dad Torture child boy police investigation


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal