ஜெகன்மோகன் ரெட்டியிடம் விஜய் வைத்த ‘ரகசிய’ கோரிக்கை? சிரித்தப்படியே தலையை ஆட்டிய ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை விஜய் சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண விழாவில் விஜய் கலந்துகொண்டார். இந்த சந்திப்பின் போது இருவரும் தனிப்பட்ட முறையில் சில நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. அரசியலில் ஜெகன்மோகன் ரெட்டியை தனது ‘ரோல் மாடல்’ எனக் கருதுவதாக முன்பே கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த சில பொதுக்கூட்டங்களில் விஜய்யின் பேச்சு முறை மாற்றமடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். திமுகவை கடுமையாக விமர்சித்தாலும், பாஜக குறித்து நேரடி தாக்குதல் இல்லாதது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில், “இது சட்டசபைத் தேர்தல்; அதனால் திமுகவையே விமர்சிக்கிறேன். மக்களால் பலமுறை டெலிட் செய்யப்பட்டவர்களை பற்றி பேச தேவையில்லை” என அவர் கூறியிருந்தார்.

இந்த மாற்றத்திற்குப் பின்னணியாக ஜெகன் வழங்கிய ஆலோசனையே காரணம் என சில அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தகவல்களின் படி, திருமண நிகழ்ச்சியில் விஜய், தனது அரசியல் நிலைமை குறித்தும், “ஜனநாயகன்” திரைப்பட வெளியீடு தொடர்பான சிக்கல்கள் மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஜெகனிடம் பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது, “தேவையில்லாமல் பாஜகவை சீண்ட வேண்டாம். தவெக ஒரு மாநிலக் கட்சி. தற்போது சட்டசபைத் தேர்தல் தான் முக்கியம். திமுக மீது மட்டும் எதிர்ப்பை நிலைநிறுத்துங்கள்” என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையை விஜய் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதே சந்திப்பில் விஜய் ஒரு அரசியல் கோரிக்கையும் வைத்ததாக பேசப்படுகிறது. தமிழக எல்லைப்பகுதிகளில் வசிக்கும் ஆந்திர ரெட்டி சமூகத்தினரிடம் தவெகவுக்கு ஆதரவு வழங்குமாறு சொல்லுமாறு ஜெகனிடம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி சிரித்தபடி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனினும், இந்த தகவல்கள் குறித்து எந்தத் தரப்பும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், 2026 தேர்தலை முன்னிட்டு மாநிலங்களைக் கடந்து அரசியல் தொடர்புகள் வலுப்பெறுகின்றன என்பதற்கான சுட்டிக்காட்டாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay secret request to Jaganmohan Reddy YS Jaganmohan Reddy shook his head while laughing


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->