கன்னியாகுமரி | சூறைக்காற்றில் சிக்கிய விசைபடகு! குளச்சலை சேர்ந்த 3 மீனவர்கள் மாயம்!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி, குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 52) இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 25ஆம் தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து படகின் உரிமையாளர் உள்பட 16 பேர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். 

இந்நிலையில் நேற்று அவர்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது குமரி கிழக்கு கடல் பகுதியான உவரிப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி ராட்சத அலையில் சிக்கி அவர்களது படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. 

இதனால் படகில் இருந்த ஆரோக்கியம் உள்பட 16 பேரும் கடலுக்குள் மூழ்கி தத்தளித்தபடி இருந்தனர். இதனை கவனித்த மற்றொரு படகினர் தத்தளித்து கொண்டிருந்த ஆரோக்கியம் உள்பட 13 பேரை மீட்டனர். 

இருப்பினும் 3 பேர் கடலில் மாயமாக்கினார். அவர்களை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மீட்கப்பட்ட 13 மீன்களை கரைக்கு அழைத்து சென்றனர். 

கடலில் விழுந்த 3 மீனவர்கள் மாயமானது குறித்து குளச்சல் விசைப்படகு சங்கம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினருக்கு தகவல்கள் அளிக்கப்பட்டு தகவலின் பெயரில் கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் கடலுக்குள் சென்று காணாமல் போன மீனவர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari powerboat caught storm3 fishermen missing 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->