லாரியில் இல்லீகில் என்ட்ரி..! மொத்த வடக்கன்ஸையும் வேனில் ஏற்றிய தமிழக காவல்துறை.! - Seithipunal
Seithipunal


விவசாயிகள் என்று தெரிவித்து குமரியில் சைக்கிள் பேரணியை தொடங்க முயன்ற ஹரியானா மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் 100 நாட்களை கடந்தும் டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களிலும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களின் கவனம் தேர்தல் களத்தை நோக்கி திரும்பியுள்ளது. 

இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள, போராட்டக் குழுவைச் சார்ந்த சிலர் கண்டெய்னர் லாரியில் உணவு, ஏராளமான பொருள்கள் மற்றும் சைக்கிளுடன் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அங்கு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பாஜகவை எதிர்த்து சைக்கிள் பேரணி செல்ல பிரச்சாரத்தை முன்னெடுத்துதாகவும் கூறப்படுகிறது. 

இந்த விஷயம் எப்படியோ பாஜக ஆதரவாளர்களுக்கு தெரியவரவே, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அனுமதியின்றி சைக்கிள் பேரணி நடத்தி செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. 

மேலும், விவசாயிகள் என்ற பெயரில் ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த சிலர் வந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. டெல்லி காவல்துறைக்கு சவால் விடுவது போல தமிழக காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்த நிலையில், ஒவ்வொருவராக கைது செய்த காவல்துறையினர் அனைவரையும் வேனில் ஏற்றினர். இவர்களை அழைத்து வந்த மேனேஜரும் கைது செய்யப்பட்டார். 

ஏற்கனவே, டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் விவசாயிகள் கிடையாது, அவர்கள் மண்டி நடத்துபவர்கள்., விவசாயிகளுக்கான வேளாண் சட்டத்தால் மண்டி நடத்துபவர்களுக்கு மட்டுமே பிரச்சனை. அவர்களுக்கு கமிஷன் கிடைக்காது என்ற காரணத்தால் அவர்கள் போராட்டம் நடத்தி வருவதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்து நிலையில், இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Police Arrest Fake Farmers Making Trouble Against BJP in Kanyakumari Arrived from Haryana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->