ஒரு பைக்கில் 3 பேர்.. நிறுத்த முயற்சித்த காவல் அதிகாரி படுகாயம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


அழகியமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபடுகையில், இரு சக்கர வாகனம் மோதி காவல் அதிகாரி தூக்கி வீசப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதன்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 பேர், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை கண்டுள்ளனர். 

இதனையடுத்து, 3 வாலிபர்களையும் கவனித்த காவல் துறையினர், இவர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கவே, அதிவேகத்தில் வாகனத்தில் வந்த கொடூரர்கள் காவல் அதிகாரியின் மீது வாகனத்தை ஏற்றிவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

இந்த சம்பவத்தில், காவல் அதிகாரி குருநாதன் என்பவர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள், காவல் அதிகாரி குருநாதனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Nagarcoil Police Accident by Culprit Youngster Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal