கடலில் ஏற்பட்ட மாற்றம்..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..! - Seithipunal
Seithipunal


கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரியில் உள்ள கடலில் அடிக்கடி பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். 

கன்னியாகுமரியில், கடல் சீற்றம், கொந்தளிப்பு, உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, நீர்மட்டம் உயர்வது என பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. 

அங்கு சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்ததனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதை பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க பயந்தனர்.

ஆனால், மீனவர்கள் எந்தவித அச்சமுமின்றி வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும், வங்ககடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால், கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று  வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வந்தது.

சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள். அதே சமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari sea intake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->