மாவட்டங்கள் தனிமைப்படுத்தல்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஊரடங்கு உத்தரவு அமலாகியிருந்தது. இதனால் பரபரப்புடன் காணப்படும் பல்வேறு நகரங்கள் வெறிசோடி காணப்பட்ட நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையும் வெறிச்சோடி இருந்தது.

வரும் 22 ஆம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு நிலையில், அடுத்தடுத்து பல உத்தரவுகள் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் தனிமைப்படுத்த அறிவிப்பு வெளியானது.

நேற்றைய மக்கள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் பகுதியில் உள்ள தொழிற்சலைகளும் அடுத்தடுத்து மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரிய அளவிலான கடைகளை மூட சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தேவையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சாலையில் மக்கள் தேவையில்லாமல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர்த்து பிற கடைகள் மூட வேண்டும். பால் மற்றும் மருந்தகத்தை தவிர்த்து பிற கடைகள் அனைத்தையும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்திற்க்கான தனிமைப்படுத்தப்படும் உத்தரவை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும், இந்த உத்தரவை மீறும் நபர்களின் மீது தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram district collector announce city closing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->