எங்கள் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருத்துள்ள - பரப்புரையில் அடித்து நொறுக்கும் கமல்.! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ”பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன் இருக்கப் போகிறது. நாம் கொடுக்கிற வரியில், ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது. 

ஆனால், இங்க நம்ம ஊருக்கு வேலை தேடி வர்ராங்களே அவர்களுடைய ஊரில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்களுக்கு 7 ரூபாயை மத்திய அரசு திருப்பி கொடுக்கிறது. ஆனால், அங்கே இருந்து தான் தமிழகத்திற்கு கூலி வேலைக்கு வருகிறார்கள். அப்போ இந்த பணம் என்னாச்சு? இதனை நாம் கேட்க வேண்டும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது ஆண்டாண்டு காலமாக நம்மை பற்றி மற்றவர்கள் சொல்லும் புகழ். நாம் ஏற்றுக்கொண்ட ஒரு பொறுப்பு. கடமை. இங்கே வரும் போது பிரதமர் மோடி மழலை தமிழில் ஒரு இரண்டு மூன்று வார்த்தைகளில் பேசுவார். வரப்பு உயர நீர் உயரும். இது எல்லாம் நம்மளுக்கு தெரியும். ஆனால், நாம இப்படி கேட்டதே இல்லை. அட! ஒளவையாரே இன்னொரு மொழியில் இப்படி பேசியிருக்கிறார் போல சந்தேகப்படும் வகையில் மோடி பேசுகிறார்.

நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அங்கே வடநாட்டில் யாராவது கட்டப்பா என்று பெயர் வைத்துள்ளனரா? வ உ சி என்று பெயர் வைத்துள்ளனரா? ஆனால், இங்கே நேரு என்று பெயர் வைத்தவர்கள் கூட இருக்கிறார்கள். தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது எல்லாம் பொய். எங்கள் பெயரை கேட்டாலே தெரியும். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal speech in erode election campaighn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->