கல்லணை - கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரியா? உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு பதில்!  - Seithipunal
Seithipunal


கல்லணை, கொள்ளிடத்தில் மணல் எடுக்கும் திட்டம் இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

குடிநீர் எடுப்பதற்காகவே குழாய் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

மணல் குவாரிகள் இந்த பகுதியில் அமைத்தால் கல்லணை சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக அப்போது நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்

இதனை தொடர்ந்து, கல்லணை மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் மணல் குவாரி நடத்த தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது

முன்னதாக, தமிழகம் முழுவதும் சுமார் 23 மணல் குவாரிகளை திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

மேலும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசின் புதிய மணல் குவாரிகளுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கல்லணை - கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரி திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallanai kollidam sand Quarry case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->