கோவில் தேரோட்டம்: தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை!
Theni local holiday tomorrow
தேனி, வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வருகின்ற மே 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் நாளை தேரோட்டம் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து மே 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதிகளின் ரத வீதிகளில் தேரோட்டம், தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை ஒருநாள் மட்டும் தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Theni local holiday tomorrow