தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு - நீதிபதிகள் ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காமராசு என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது, தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு நீர் கலப்பதை கூட அனுமதிக்க மாட்டோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உரிய அரசுத்துறைக்கு ரூ.100 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெல்லை மண்டல பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் அதிகாரி நேரிலும், நெல்லை மாநகராட்சி ஆணையர் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் ஆஜராகி, தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒத்துக்கொண்டனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன சாட்சியே இல்லையா? பொதுப்பணித்துறை அதிகாரி, மாநகராட்சி அதிகாரி வீடுகளில் இதுபோல கழிவுநீர் சென்றால் இப்படி பார்த்துக்கொண்டு இருப்பார்களா? என்று சராமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

பின்னர், 7 நிறுவனங்கள் பாக்கித்தொகை குறித்தும், கழிவுநீரை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் பொதுப்பணித்துறை, நெல்லை மாநாகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டு விசாரணையை 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

justice question rised drianage mixing tamirabarani river


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->