ஊழல் வழக்குகள்! புழுக்கலின் டப்பாவை திறந்தது போன்ற உணர்வு! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை ! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தபோது வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது ஆகிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது "நான் புழுக்களின் டப்பாவை திறந்தது போல உணர்கிறேன். ஒவ்வொரு வழக்காலும் நான் நோய்வாய்ப்படுகிறேன். நிர்வாகம் முறையாக செயல்படாமல் தோல்வி அடைந்துள்ளது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் எனத் தோன்றுகிறது.

நீங்கள் என்ன விளக்கம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் நான் கூறியது உண்மைகள். இது போன்ற வழக்குகளை நான் தொடர்ந்து பார்த்து களைத்துவிட்டேன். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைனர் அரசியல்வாதிகளாகிவிட்டார்கள். இருப்பினும் அதிகாரிகளுக்கு எதிராக நான் எதுவும கூற முயற்சிக்கவில்லை.

அதிகாரிகளுக்கு எந்த வகையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. எந்த சட்டமன்ற உறுப்பினரும் விசாரணையை சந்திக்க விரும்பவில்லை. அவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள். ஆனால் நான் இது போன்ற வழக்குகளில் ஆழமாகச் செல்செல்லும்போது இன்னும் அதிகமான வழக்குகள் வெளியே வருகிறது.

இதிலிருந்து நான் எவ்வாறு வெளியேறப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை எதிர்கொண்டு சுத்தமாக வாருங்கள். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். இது அரசு நிர்வாகத்தின் பிரச்சனையாக கருதுகிறேன், அரசாங்க அமைப்பு தோல்வியடைந்துள்ளது. இது எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை" என தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Justice Anand Venkatesh said that I have opened a can of worms


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->