ஜெயலலிதா மரண வழக்கு! விசாரணையை மீண்டும் தொடங்கியது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் விசாரணை நடத்தி வந்தது.

அந்த விசாரணையில் ஜெயலலிதாவோடு தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்து முடிந்திருக்கிறது.

அப்பல்லோ மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 

அதன்பின்னர் மருத்துவக் குழுவினர் அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. விசாரணையில் பங்கேற்க அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் 11 பேருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்று காலையில் 5 டாக்டர்கள் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். நாளை 6 மருத்துவர்கள் ஆஜராக உள்ளார்கள்.

இன்றைய விசரனையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் காணொலி மூலமாக பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது 2016ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா உடல்நிலை சரி இல்லாமல் தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்ததாகவும், ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியும் அதனை அவர் ஏற்கவில்லை என நேரில் ஆஜரான அப்பல்லோ மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judge Arumugasamy commission enquiry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->