இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் வரும் 2-ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. 

அதன்படி, இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 02.02.2024 அன்று நடைபெறவுள்ளது. ஆகவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

 

இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வுசெய்யவுள்ளனர். 

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ பயிற்சி மற்றும் கணினியியல் முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 02.02.2024 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job opportunity camp in namakkal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->