நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்! மருத்துவ குழுவை நியமித்தது எய்ம்ஸ்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழுவை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் நியமித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017 -ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையம் ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு சாட்சிகளிடமும், அப்பல்லோ மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து தங்களின் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதனையடுத்து விசாரணை ஆணையத்துக்கு உதவ மருத்துவர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தும் போது, மருத்துவர்கள் உடன் இருக்க வேண்டும் என்பதால் மருத்துவர்களின் பெயர்களை விரைவில் பரிந்துரைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனருக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. அதனையடுத்து தற்போது விசாரணை ஆணையத்திற்கு உதவும் வகையில் 8 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவக் குழுவை எய்ம்ஸ் நிர்வாகம் நியமித்திருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், மருத்துவர் அனந்த் நவீன் ரெட்டி உறுப்பினர் செயலராகவும், டாக்டர் விஷால் போகாட் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் ராஜீவ் நரங், ஆனந்த் மோகன், விமிரிவாரி,  நிதிஷ் நாயக்,  வி.தேவ கவுரோ ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.  

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் அனைவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட  சிகிச்சைகள்  தொடர்பான துறைகளில் வல்லுநர்கள் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து விசாரணை ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த வரும் 16 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் எனவும் அதில் பங்கேற்க வருமாறு மருத்துவ குழுவுக்கு ஆணையத் தலைவர் விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalitha death inquiry commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->