அடுத்தகட்ட விசாரணை குறித்து ஆலோசனை! ஜெயலலிதா மரண வழக்கில் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், அடுத்தகட்ட விசாரணை தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, அது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. 

இந்த விசாரணை ஆணையம், சசிகலாவின் உறவினர்கள்,  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பணிபுரிந்த பணியாளர்கள்,  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரனைக்கு தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுனர் குழுவை அமைக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் அண்மையில் மருத்துவ நிபுனர்கள் கொண்ட குழுவை  எய்ம்ஸ் நிர்வாகம் நியமித்தது. 

இதனை தொடர்ந்து, விசாரணையை மீண்டும் தொடர்வது, விசாரணைக்காக யார் யாருக்கு சம்மன் அனுப்பலாம், விசாரணையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையாம் இன்று ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பெரும்பாலானோரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டதால், யார் யாரை கூடுதலாக விசாரிக்கலாம் என்பதை ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். மேலும் விசாரணையை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த கருத்துக்களை எழுத்து மூலமாக கொடுக்கும்படி ஆணையம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். விசாரணையின் அடுத்த செயல்பாடுகள் தொடர்பாக வரும் 22-ஆம் தேதி எழுத்து மூலமாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எய்ம்ஸ் மருத்துவ குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டதாகவும், அதற்கு ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி கூறியதாக ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். இதனையடுத்து வரும் 22-ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக தங்களின் கருத்தை நீதிபதியிடம் தாக்கல் செய்ய உள்ளதாக ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalitha case enquiry commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->