சென்னையில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் என்ன?..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் ஊரடங்கானது கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் 20 விழுக்காடு பணியாளர்களுடன், அதிகபட்சமாக 40 நபர்கள் பணியாற்றலாம் என்றும், முடிந்தளவு வீடுகளில் இருந்து பணியாற்றும் சேவையை ஊக்குவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

வணிக வளாகங்களை தவிர்த்து, ஷோவ்ரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும், அதிகபட்சமாக கடைக்குள் ஒரே நரேத்தில் 5 வாடிக்கையாளர்களை அனுமதி செய்யலாம் என்றும், சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்த பின்னர் கடைக்குள் அனுமதிப்பது போன்றவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடைகளில் இருக்கும் குளிர்சாதன இயந்திரங்கள் உபயோகம் செய்யக்கூடாது.

வரும் ஜூன் 8 ஆம் தேதி வரை உணவகத்தில் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கபடுகிறது என்றும், 50 விழுக்காடு இருக்கையில் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிட அனுமதி வழங்கலாம் என்றும், சமூக இடைவெளி போன்றவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், கடைகளில் உள்ள குளிர்சாதனங்கள் கட்டாயம் இயக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர் கடைகளில் வரும் ஜூன் 7 ஆம் தேதி வரை பார்சல் மட்டுமே வழங்கவேண்டும் என்றும், காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் போன்றவை காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் தேநீர் கடைகளில் 50 விழுக்காடு அளவுள்ள வாடிக்கையாளர்கள் இருக்கையில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாக்சி மற்றும் வாடகை டாக்சி போன்றவை ஓட்டுனரை தவிர்த்து மூன்று பயணிகளுடன் மண்டலத்திற்குள் இ பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம். 

ஆட்டோக்களில் ஓட்டுனரை தவிர்த்து இரண்டு பணிகள் பயணம் செய்யலாம். அழகு நிலையங்கள் குளிர்பதன வசதியை உபயோகம் செய்யாமல் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது. மேற்கூறியுள்ள நடைமுறைகள் சென்னை (மண்டலம் 8) மாநகர காவல் எல்லைகளுக்கும், சென்னையை ஒட்டி அமைந்துள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் (மண்டலம் 7) ஆகிய மாவட்டத்திற்கும் பொருந்தும். நோய்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு எவ்வித தளர்வுகளும் கிடையாது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Janta Curfew 5 Chennai relaxation announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->