ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்! கோடை நெரிசலைத் தவிர்க்க சென்னை -ஹவுரா இடையே மெகா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னை சென்டிரல் முதல் மேற்கு வங்காளம் ஹவுரா அருகிலுள்ள சந்திரகாச்சி வரை கோடை கால நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து ஏப்ரல் 22-ம் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06005), மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், சந்திரகாச்சியில் இருந்து ஏப்ரல் 23-ம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 06006) சிறப்பு ரெயில், மூன்றாம் நாள் காலை 9 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த ரெயிலில் பயணிகள் வசதிக்காக 13 தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1 ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 3 ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு காலை 8 மணியிலிருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சென்னை சென்டிரலிலிருந்து மேற்கு வங்காளத்தின் கரக்பூர் நோக்கியும் சிறப்பு ரெயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 06003) இந்த ரெயில், மறுநாள் மாலை 4 மணிக்கு கரக்பூரை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

மறுமார்க்கத்தில், கரக்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 06004) சிறப்பு ரெயில், மூன்றாம் நாள் அதிகாலை 3 மணிக்கு ஈரோட்டை அடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சேவைக்கான முன்பதிவும் காலை 8 மணியிலிருந்து தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jackpot train passengers Mega special trains announced between Chennai and Howrah avoid summer rush


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->