பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்த ஐடிஐ ஊழியர்..போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

மாணவி ஆன்லைன் கிளாஸ்க்கு பயன்படுத்துவதாக கூறி அந்த செல்போனை சமூக வலைதளங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார். அதாவது வாட்ஸ்அப் மூலம் சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த கலையரசன் (24) என்ற வாலிபருடன் மாணவியைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐடிஐ படித்துள்ள கலையரசன் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கலையரசன் வாட்ஸ் அப் மூலம் மிகவும் நெருங்கி பழகியுள்ளார். அதன் பின்னர் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தான் உன்னை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கலையரசன் மார்த்தாண்டம் வந்து அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து மாணவியை தொடர்பு கொண்டு இரவு நேரங்களில் மாணவியின் வீட்டுக்கு சென்று காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், மாணவியை வற்புறுத்தி பாலியல் பலத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மாணவியின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தபோது அந்தப் பகுதி மக்கள் கலையரசனை பார்த்துள்ளனர். பின்னர் அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரணை நடத்தினர். அப்போது சேலத்தில் இருந்து வந்து மாணவியை பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் கலையரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITI employee arrested for sexually assaulting schoolgirl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->