பாடக் குறிப்பேடுகளை மட்டும் ஆசிரியர்கள் பயன்படுத்தினால் போதுமானது - பள்ளிக் கல்வி ஆணையர்..! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், தமிழக அரசு ஆசிரியர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் பணிச்சூழல் பொருத்தமான முறையில் இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிர்வாக பணிச்சுமையை குறைக்கவும் பின்பற்றப்பட்ட தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் என்றும் அறிவித்தார். 

இதனால், ஆசிரியர்கள் தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் பள்ளி பதிவேடுகளை கணினி மயமாக்கப்படும் என்று மானிய கோரிக்கையின்போது தெரிவித்தார். 

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் படி பள்ளிக்கல்வி ஆணையர் தேவையற்ற 11 பதிவேடுகளை நீக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அந்த சுற்றறிக்கையில், கருவூல பதிவேடு, சம்பள பிடித்தம் பதிவேடு, கூடுதல் பண பதிவேடு, நிரந்தர சம பதிவேடு, நிலுவையில் உள்ள சிறப்பு கட்டண பதிவேடு, அபராத பதிவேடு, பில் பதிவேடு, தற்காலிக பதிவேடு உள்ளிட்ட 11 பதிவேடுகளை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 81 பதிவேடுகளை கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக கணினியில் மட்டும் பராமரித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடுகளை  மட்டும் பராமரித்தால் போதுமானது. 

இந்தப் பதிவேடுகளைத் தவிர வேறு எந்தவொரு பதிவேட்டையும் பராமரிக்க தேவை இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 முதல் 12-ம் வகுப்பு பாட ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடுகளை  மட்டும் பராமரித்தல் போதுமானது. 

பாடத்திட்டம், பணி செய் பதிவேடு ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It is enough if teachers only use textbooks- School Education Commissioner..!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->