ஆன்லைன் டிரேடிங்கால் பல லட்சம் நஷ்டம்; 06 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள இரும்புக்கடை ஊழியர்..! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் டிரேடிங்கால் 15 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், மனமுடைந்த இரும்புகடை ஊழியர் ஒருவர் தனது 06 வயது மகளுடன் விரைவு ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் 38 வயது லோகநாதன். இவரது மனைவி வாணி. இவர்களது மகள் சாஸ்விகா 06 வயது. 02-ஆம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன், திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருள் வாங்கி விற்பனை செய்து வந்த லோகநாதனுக்கு அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அத்துடன், கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதுகுறித்து மனைவியிடம் கூறியபோது, நீங்கள் வருத்தப்படவேண்டாம், பார்த்துகொள்ளலாம் என மனைவி கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது மகள் சாஸ்விகாவிடம் வெளியில் சென்றுவிட்டு வருவோம் என கூறி புட்லூர் ரயில்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் கடையில் சாப்பிட்டுவிட்டு ரயில்நிலையத்தில் வெகுநேரம் இருந்துள்ளனர். பின்னர் இரவு 11 மணி அளவில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற விரைவு ரயில் முன் திடீரென மகளுடன் லோகநாதன் பாய்ந்துள்ளார். இதில் தூக்கிவீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பாலியாகியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் டிரேடிங்கால் ஏற்பட்ட நஷ்டத்தில் மகளுடன் தந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ironmonger commits suicide by jumping in front of a train with his 6 year old daughter after losing several lakhs through online trading


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->