முதலீட்டாளர்கள் மாநாடு 2024: 2 ஆம் நாள் அமர்வு தொடக்கம்! - Seithipunal
Seithipunal


உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நேற்று தொடங்கி, இன்று இரண்டாம் நாள் அமர்வு தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமர்வில் 5.5 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இன்றும் பல்வேறு முதலீட்டாளர்கள் அமர்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர். இரண்டாம் நாளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 300 புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான இலக்கை  5.5 லட்சம் கோடி நேற்று எட்டி விட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. இரண்டாம் நாளுக்கான இந்த அமர்வு காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. 

இன்றைய தினத்தை பொருத்தவரை பல அமர்வுகள் பல தலைப்புகளில் தமிழ்நாட்டிற்கான முதலீடுகளில் வாய்ப்புகள் குறித்து நடைபெற உள்ளது. 

ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கான முதலீடு மற்றும் அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஒரு அமர்வு நடைபெறும். 

இதில் தொழிற்துறை சார்ந்த பல நிபுணர்களும் கலந்து கொள்ள உள்ளனர். பல தலைப்புகளில் முதலீடுகளுக்கான வாய்ப்பு அதற்கான சாத்திய கூறுகள் என்ன உள்ளது என்பதை விவாதிக்க உள்ளனர். 

குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், பொறியியல் துறையின் வளர்ச்சி, எலெக்ட்ரிக் வாகனங்கள் போன்றவற்றிற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. உணவு மற்றும் விவசாயத் துறைக்கான முதலீடுகள் குறித்தும் அதற்கான சாத்திய கூறுகள் போன்றவற்றை தனித்தனி அமர்வுகள் மூலம் விவாதம் நடைபெற உள்ளது. 

மதியம் 1 மணி அளவில் சிறு குறு முதலீட்டாளர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி அளவில் மகேந்திரா குழுமத்தின் தலைவர் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

மேலும் 30 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்த மாநாட்டில் ஒரு பார்வையாளராக கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. 

இன்று மாலை 4.30 மணி அளவில் இறுதி நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் குறித்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Investors Conference 2024Day 2 Session Begins


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->