கர்ப்பிணி வயிற்றில் ஊசி வைத்து தைத்த அவலம்..! மருத்துவர் இன்றி செயல்பட்ட நிர்வாகம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற உச்சிபுளி அருகே உள்ள வலசையைச் பகுதியில் வசித்து வருபவர் ரம்யா. இவர் கர்ப்பிணியாக இருந்தார், இதன் காரணமாக இவருக்கு கடந்த 17 ஆம் தேதி பிரசவ வலியால் துடித்தார். இதை தொடர்ந்து, அவர் உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் மீண்டும் இவருக்கு 19 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. 

அப்போது மருத்துவமனையில் எந்த மருத்துவர்களும் இல்லை என்பதால், செவிலியர்களால் மருத்துவம் பார்க்கப்பட்டது. அதன் பின் தாயும் சேயும் நலமாக இருந்துள்ளனர். பின்னர் ரம்யாவுக்கு கடந்த 2 நாட்களாக வயிற்றுவலி ஏற்பட்டுது, கூடுதலாக ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக சென்றார். 

அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, ரம்யாவின் வயிற்றில் ஊசி வைத்து தைத்திருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த  ரம்யாவின் உறவினர்கள், உச்சிபுளி அரசு சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, செவிலியர்களைக் கைது செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள்.

இதற்கு முன்னதாக இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன், அறுவை சிகிச்சை செய்து ஊசியை வெளியே எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

injection in pregnant lady stomach


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->