இந்தியாவின் பழைமையான மொழி தமிழ் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே உள்ள திருவான்மியூரில் கலாஷேத்ரா பவுண்டேஷன் வளாகத்தில் "விட்டஸ்டா 2023" என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருடைய மனைவியுடன் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அங்கு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, 

"வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒரு அரசியல் வார்த்தை மட்டும் அல்ல. அந்த வார்த்தையில் நம்முடைய வாழ்வியலும் அடங்கும். இந்தியாவின் பழமையான மொழி தமிழ். காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல தொடர்புகள் உள்ளது. 

18 ஆம் நூற்றாண்டு முன்பு வரை பொருளாதாரத்தில் மிகத் தலை சிறந்த நாடாக இந்தியா இருந்துள்ளது. அதனை நாம் அனைவரும் மீட்டு எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indias oldest language tamil governor rn ravi speach in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->